Jesus Power
Ministries

Faith • Truth • Hope

Faith Digest

Discover inspiring Bible messages, practical Christian teachings, devotional thoughts and faith-building reflections for everyday life.

Showing archive September 2026
Clear Filter
பரிசுத்தம் என்றால்....
11 Sep

பரிசுத்தம் என்றால்....

«“நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும்...” — ரோமர் 12:1»

இன்றைய வேத பகுதி: ரோமர் 12:1–21 ஒழுங்காக இருப்பது மட்டும் பரிசுத்தமா? பரிசுத்தம் என்பது நம்மை நாமே ஒழுங்குபடுத்திக் கொண்டு, சரியாகவும், சீராகவும், குறைகூற இயலாத விதமாகவும் வைத்துக்கொள்ளுதல் மட்டும் அல்ல. நம்முடைய வாழ்க்கையை ஒழுங்காக வைத்துக்கொள்ள வேண்டும். தவறுகளைத் தவிர்க்க வேண்டும். நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்முடைய செயல்களிலும், வார்த்தைகளிலும், வாழ்க்கை முறையிலும் ஒழுங்கு இருக்க வேண்டும். இவையெல்லா...

Read
உள்ளே ஆசீர்வாதம்!
10 Sep

உள்ளே ஆசீர்வாதம்!

«“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறது போல...” — 3 யோவான் 2»

இன்றைய வேத பகுதி: சங்கீதம் 30:1–19 உண்மையான ஆசீர்வாதம் எங்கே இருக்கிறது? சொந்த வீடு இருப்பது ஆசீர்வாதமாக இருக்கலாம், நல்ல வாகனம் இருப்பதும் ஆசீர்வாதமாக இருக்கலாம், பொருளாதார வசதிகள் இருப்பதும் தேவனுடைய கிருபையாக இருக்கலாம், ஆனால், இவைகள் மட்டுமே ஆசீர்வாதத்தின் அடையாளம் அல்ல. ஒருவரிடம் எல்லா வசதிகளும் இருக்கலாம், ஆனால் உள்ளத்தில் சமாதானம் இல்லாமல் இருக்கலாம், பெரிய வீடு இருக்கலாம், ஆனால் அந்த வீட்டிற்குள் சந்தோஷம் இல்...

Read
அனுபவங்கள் அவசியம்!
09 Sep

அனுபவங்கள் அவசியம்!

««“நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல...” — 1 பேதுரு 2:3»»

இன்றைய வேத பகுதி: 1 பேதுரு 2:1–12 பக்திமானா? ஆவிக்குரியவரா? ஒருவர் ஒரு நீண்டகால கிறிஸ்தவ பக்தர். ஆராதனை, ஜெபம், வேத தியானம், இறைப்பணி, பக்தி ஒழுங்குகள் என பல நல்ல விஷயங்கள் அவருடைய வாழ்க்கையில் இருந்தன. அவர் சபைக்குச் செல்வார், ஜெபிப்பார், வேதாகமத்தை வாசிப்பார், தேவ ஊழியங்களிலும் ஈடுபடுவார், பிறருக்கு உதவிகளும் செய்வார், வெளிப்பார்வைக்கு அவர் ஒரு நல்ல பக்திமான். ஆனால், அவருடைய சுபாவங்களும் பண்புகளும் கர்த்தரைப் பிரதி...

Read
அன்பை தீர்மானிப்பது யார்?
07 Sep

அன்பை தீர்மானிப்பது யார்?

««“நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல...” — 1 யோவான் 4:10»»

இன்றைய வேத பகுதி: 1 யோவான் 4:7–21 அன்பு யாருடைய செயல்களைப் பொறுத்தது? குறிப்பிட்ட ஒருவர் தன் தாய், தந்தை, சகோதரர்கள், நண்பர்கள் யாவராலும் அன்பற்றவர் என்றும், கொடுங்குணம் படைத்தவர் என்றும் பெயர் வாங்கியுள்ளார். ஆனால், அவருடைய மனைவி மட்டும், “என் கணவனைப் போல அன்புள்ளவர் யாருமில்லை” என்று கூறுவாளாம். அது உண்மைதான். அவன் தன்னுடைய மனைவியை மட்டும் உண்மையிலேயே மிக அதிகமாக நேசிக்க இயன்றவனாயிருந்தான். ஏனென்றால், அவள் அவனுடைய...

Read
வாழ்வெல்லாம் இயேசுவுக்கே!
05 Sep

வாழ்வெல்லாம் இயேசுவுக்கே!

«“ஜீவ அப்பம் நானே...” — யோவான் 6:35»

இன்றைய வேத பகுதி: யோவான் 6:35–56 வாழ்க்கையோடு கலக்கும் உணவு: ஒரு ஆப்பிள் பழத்தை இன்று சாப்பிடுகிறோம், இரண்டு நாட்கள் கழித்து அந்த ஆப்பிள் பழம் இப்போது எங்கே இருக்கிறது என்று நம்மால் சொல்ல முடியாது. அதன் சத்துக்கள் நம்முடைய உடலோடு கலந்து விடுகின்றன. இரத்தம், நரம்புகள், எலும்புகள் மற்றும் உடலின் பல பகுதிகளுக்கும் அதன் சத்துக்கள் பயன்படுகின்றன. “இந்தச் சத்து இதோ என் கையில் இருக்கிறது” அல்லது “இதோ என் காலில் இருக்கிறது”...

Read
யார் உணர்த்துகிறார்?”
04 Sep

யார் உணர்த்துகிறார்?”

«“அவர் வந்து பாவத்தைக் குறித்தும்...” — யோவான் 16:8»

இன்றைய வேத பகுதி: யோவான் 16:1–16 பிரசங்கம் கேட்கும்போது மட்டும் உணர்த்தப்படுகிறோமா? ஒரு கிறிஸ்தவ சகோதரர் பாவங்களையும் தவறுகளையும் நன்றாகச் சுட்டிக்காட்டும் பிரசங்கங்களை விரும்பிக் கேட்பார். ஒரு வல்லமையான பிரசங்கத்தைக் கேட்டவுடன், தன்னுடைய வாழ்க்கையில் உள்ள தவறுகளை ஆழமாக உணர்ந்து, பாவ உணர்வுடன் கண்ணீர் சிந்தி ஜெபிப்பார். “அந்த வார்த்தைகள் என்னுடைய பாவத்தை நன்றாக உணர்த்தியது” என்று சொல்வார். ஆனால் ஒரு விசித்திரமான விஷய...

Read